இலங்கை அணிக்கு தற்போது பெரிய பிரச்சனை இதுதான்: சரி செய்யுமா?

ஐசிசி விதிகளின் படி செயல்படாமல் மெதுவாக பந்து வீசி வருவது இலங்கை அணிக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹஸ் கிண்ண தொடரின் கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின.

இப்போட்டியில் இலங்கை அணி ஐசிசி குறித்த நேரத்தை விட 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்து கொண்டது.

இதையடுத்து அணித்தலைவர் தினேஷ் சண்டிமால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக வரும் வெள்ளிக்கிழமை இலங்கை நிச்சயம் வென்றாக வேண்டிய போட்டியில் சண்டிமால் விளையாட முடியாது.

மெதுவாக பந்துவீசும் பிரச்சனையால் இலங்கை அணி கடந்த 10 மாதங்களாகவே தவித்து வருகிறது.

ஏற்கனவே இலங்கை அணித் தலைவராக இருந்த உபுல் தரங்கா இரண்டு முறை இதே காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இனியாவது குறித்த நேரத்துக்குள் இலங்கை அணி பந்துவீசுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையில், இது கவலையளிக்கக்கூடிய விடயம் தான், உடனடியாக இந்த பிரச்சனை குறித்து களையப்படும் என இலங்கை அணியின் தெரிவு குழு தலைவர் கிரேம் லெப்ரோய் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

‘මිනිස්සු දන්නවා මම කවුද කියලා..මම කාගෙවත් පස්සෙන් යන්නේ නෑ’..සුරංග නුවන් ගැන කියමින් මාලිංග කියපු කතාව මෙන්න…

வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர் VIDEO