மீண்டும் தரவரிசையில் முன்னேறிய இந்தியாவின் முன்னணி வீரர்!
இந்தியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மீண்டும் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
ஐ.சி.சி உவ்வொரு போட்டிகளின் முடிவிலும் தரவரிசையை வெளியிட்டு வருகின்றது. இவ் தரவரிசையில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டி துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தர வரிசையில் டெஸ்ட் போட்டியில், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்கா வீரர் ரபாடா 902 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் 887 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தையும், இந்தியா வீரர் ரவீந்திர ஜடேஜா 844 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தையும், அதனை தொடர்ந்து இந்தியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஆம் இடத்தில் 803 புள்ளிகளுடனும் காணப்படுகின்றார்.
Comments
Post a Comment