இலங்கை அணி இந்தியா அணியிடம் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம்; ரோஹித் சர்மா!
இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதிய 4 ஆவது முத்தொடர் போட்டி கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
இலங்கை நாட்டின் நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகின்றது. இப் போட்டியில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா அணி 2 வெற்றிகளையும், இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் தலா 1 வெற்றிகளையும் பெற்றுளளன.
இதனடிப்படையில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதிய 4 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறுவதற்கு இந்தியா அணியின் பந்து வீச்சாளர்களே காரணம் என இந்தியா அணித்தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் அதிரடி ஆட்ட வீரர்களை கொண்ட இலங்கை அணியை, குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியமைக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment