முகமது ஷமி மீது மனைவி சூதாட்ட புகார் விசாரணை நடத்த பிசிசிஐ உத்தரவு

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமதுஷமி. இவர் மீது அவரது  மனைவி ஹசின் ஜகான்  பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி, கொலை செய்ய  முயற்சித்ததாக போலீசில் புகார் அளித்தார். 
 
தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு முகமது ஷமி துபாய் சென்று 
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
 
இதன் அடிப்படையில் கொல்கத்தா போலீசார் முகமது ஷமி மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். அதோடு கிரிக்கெட் வாரியத்துக்கு முகமதுஷமியின் தென் ஆப்பிரிக்க பயண விவரங்களை கேட்டு கடிதம்  எழுதி இருந்தனர்.
 
இந்த நிலையில் முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்து மாறு கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் பினோத்ராய்  ஊழல் தடுப்பு குழுவை கேட்டு கொண்டுள்ளார். அதன் தலைவர்  நீரஜ்குமாருக்கு  இ மெயிலில் இதை தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கையை 1 வாரத்தில் தாக்கல் செய்யுமாறும் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து முகமதுஷமியிடம் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு குழு  விசாரணை நடத்துகிறது.

Comments

Popular posts from this blog

கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

‘මිනිස්සු දන්නවා මම කවුද කියලා..මම කාගෙවත් පස්සෙන් යන්නේ නෑ’..සුරංග නුවන් ගැන කියමින් මාලිංග කියපු කතාව මෙන්න…

வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர் VIDEO