வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்.. தமிழக வீரர்கள் மட்டுமல்ல தமிழும் விளையாடுகிறது!
கொழும்பு: இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். முக்கியமாக அவர்களின் தமிழ் உரையாடல்கள் டாப் டிரெண்ட் ஆகி இருக்கிறது. இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.
இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

Comments
Post a Comment