காயம் காரணமாக சென்னை அணியிலிருந்து விலகினார் சான்ட்னர்!
இந்தியாவின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடவிருந்த நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியை ஒருநாள் தொடரில் எதிர்கொண்டது. அப்பொழுது நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான மிட்செல் சான்ட்னர் வலது முழங்கால் வழியால் அவதிப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அதில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் 9 மாதங்களுக்கு சான்ட்னர் விளையாட முடியாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுகையில், எங்கள் அணியில் 3 விதமான போட்டிகளிலும் கைகொடுக்க கூடிய முக்கியமான வீரர் அவர். எதிர்வரும் போட்டிகளில் அவர் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார்.
இத்தகைய பாதிப்பால் இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சான்ட்னர் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment